கோப்புப்படம் 
தமிழ்நாடு

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும்: துரைமுருகன்

கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு திமுகவின் அனைத்து அமைப்புகளும் பாடுபட வேண்டும்

DIN

 
கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு திமுகவின் அனைத்து அமைப்புகளும் பாடுபட வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 10 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும், கர்நாடக மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய  வேண்டுமென துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT