தமிழ்நாடு

மாமல்லபுரம் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 6 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

மாமல்லபுரம் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணி புரிந்து வந்த நிலையில், தன் குடும்பத்துடன் மாமல்லபுரம் அடுத்த கடப்பாக்கத்திற்கு ஆட்டோவில் தனது மனைவி மற்றும் மகள் தாய் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். மாமல்லபுரம் அருகே கடம்பாடி மற்றும் மனமை ஆகிய பகுதிகளுக்கு இடையே சாலை விரிவாக்க பணி நடந்து கொண்டிருக்கும் நிலையில் அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேரும் பலியானார்.

இதுகுறித்து மாமல்லபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இறந்தவர்களின் விவரம் : 

கோவிந்தன் - ஆலந்தூர் 

சுகன்யா - கோவிந்தன் மகள் 

அம்லு - கோவிந்தன் தாய்

காமாட்சி - கோவிந்தன் அம்மா

சுகன்யா குழந்தைகள் இருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

யுஎஸ் ஃபெடரல் மீதான எதிா்பாா்ப்பு: பங்குச்சந்தையில் எழுச்சி!

கவலையளிக்கும் சாலை விபத்துகள்!

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

SCROLL FOR NEXT