தமிழ்நாடு

சென்னையில் மூடப்படும் ராயபுரம் ரயில்வே அச்சகம்!

DIN

நூற்றாண்டுகள் பழமையான ராயபுரம் ரயில்வே அச்சகம் உள்பட 5 ரயில்வே அச்சகங்கள் நிரந்தரமாக மூடப்படுகின்றன. 

சென்னை ராயபுரத்தில் உள்ள ரயில்வே அச்சகத்துடன் மும்பை, ஹவுரா, செகந்திராபாத் மற்றும் தில்லியில் குறைந்த ஊழியர்களுடன் இயங்கி வந்த 5 ரயில்வே அச்சகங்களை நிரந்தரமாக மூடவும், அகற்றவும் ரயில்வே வாரியம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

முன்னதாக கடந்த 2019ல் இதற்கான உத்தரவு வெளியிடப்பட்ட நிலையில், சில அச்சகங்கள் இன்னும் டிக்கெட் அச்சிடும் பணியை முடிக்கவில்லை என்பதால் கடைசி நிமிடத்தில் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. 

ரயில்வே துறைக்கு அதிகபட்ச வருவாயை ஈட்டும் பொருட்டு இந்த இயந்திரங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டதுடன் ஊழியர்களை உரிய முறையில் பணியமர்த்தவும் இடத்தை லாபகரமானதாக பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. காகிதமில்லா பயணச்சீட்டு முறையை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பொறியியல் துறையிடம் இருந்து அறிக்கை வந்த பிறகே கட்டடத்தை இடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. 

ராயபுரத்தில் உள்ள ரயில்வே அச்சகம் 1891 ஆம் ஆண்டு அட்டைப் பயணச்சீட்டுகளை அச்சடித்து தனது பணியைத் தொடங்கியது. 2000களின் முற்பகுதியில் கணினிமயமாக்கப்பட்ட காகித டிக்கெட்டுகளுக்கு மாறியது, இப்போது முற்றிலும் எண்ம(டிஜிட்டல்)மயமாக்கப்பட்ட நிலையில் அச்சு இயந்திரம் வழக்கற்றுப் போய்விட்டதால் செலவினத்தைக் குறைத்து வருவாய் ஈட்டும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

ரயில்வே அச்சகம் மூடப்படுவதால் முன்பதிவு செய்யப்படாத, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள், கால அட்டவணைகள், வரைபடங்கள் மற்றும் இதர அச்சிடும் பணி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) அங்கீகரிக்கப்பட்ட அச்சகங்களுக்கு வழங்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

தற்போது அச்சகத்தில் உள்ள அச்சு இயந்திரங்கள் 1926 முதல் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன்

கேதார்நாத் கோயில் திறப்பு!

சினிமா கனவுகளும் நிஜ போராட்டங்களும்: ‘ஸ்டார்‘ படம் பேசுவது என்ன?

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா

SCROLL FOR NEXT