முகப்பு
தமிழ்நாடு

இபிஎஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 7 மே, 2023 at 10:32 AM
பகிர்:

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தனது சொத்து மதிப்பை குறைத்துக் காட்டிதாக வழக்குரைஞர் மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கில் உண்மை இருப்பின் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதனையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1962 கீழ்  125 ஏ 125 ஏ(1 ) 125 ஏ(11) ஆகிய மூன்று பிரிவின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி மீது சேலத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.