தமிழ்நாடு

டி.டி.வி. தினகரனை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சென்று சந்தித்தார்.

DIN

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சென்று சந்தித்தார்.

சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்துக்கு இரவு 7 மணியளவில் நேரில் சென்ற ஓபிஎஸ்ஸை டிடிவி தினகரன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். டிடிவி தினகரனுக்கு பூங்கொடுத்து கொடுத்து தனது மகிழ்ச்சியை ஓபிஎஸ் பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலந்துரையாடினர். ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர்  பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றிருந்தார். 

திருச்சியில் மாநாடு நடத்திய நிலையில், அடுத்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக டிடிவி தினகரனை நேரில் சென்று சந்தித்ததாகத் தெரிகிறது. 

திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் சின்னம்மா என்று குறிப்பிட்டு சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியிருந்தார். சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படத் தயார் என ஓ.பி.எஸ். ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில் பங்கேற்க தினரகனுக்கு அழைப்புவிடுக்கும் ஓபிஎஸ் அடுத்து சசிகலாவையும் நேரில் சென்று சந்தித்து மாநாட்டிற்கு அழைக்கவுள்ளார். 

சென்னை, விழுப்புரம், சேலம், மதுரை, நெல்லை ஆகிய பகுதிகளில் மாநாடுகளை நடத்த ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெடிகுண்டு மிரட்டல்: கேரள முதல்வர் இல்லம், நீதிமன்ற வளாகத்தில் சோதனை

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!

பாஜகவிலிருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் தலைவர்!

ஜிஎஸ்டி குறைப்பு: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலையில் மாற்றம்!

ஓடிடியில் கவனம் பெறும் பன் பட்டர் ஜாம்!

SCROLL FOR NEXT