தமிழ்நாடு

வங்கக் கடலில் மோக்கா புயல் உருவானது!

DIN

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றது.

மேலும், புயல் மியான்மர் நோக்கி நகரும் என்பதால் சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் வெயில் சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி செவ்வாய்க்கிழமை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்றது.

வடமேற்கு திசையில் நகர்ந்து புதன்கிழமை காலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது, வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வியாழக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றுள்ளது.

தொடர்ந்து இன்று நள்ளிரவில் அதிதீவிர புயலாக தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு - வட கிழக்கு திசையில் நகர்ந்து சனிக்கிழமை சற்று வலுவிழந்து ஞாயிற்றுக்கிழமை (மே 14) காலை தென்கிழக்கு மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கக்கூடும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 130 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT