தமிழ்நாடு

முதல்வரை தொடர்ந்து அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு!

DIN


சென்னை: முதல்வரை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

திமுக அமைச்சா்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி, அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆா்.பாலு, கனிமொழி, கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன், கதிா் ஆனந்த், முதல்வரின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ஏப்ரலில் வெளியிட்டாா்.

அண்ணாமலை வெளியிட்ட சொத்து ஆவணங்கள் போலியானவை என்று திமுக சாா்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, தவறான தகவல் வெளியிட்டதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினாா்.

அதேபோல், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல திமுக தலைவா்கள் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினா். 

இந்நிலையில், எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி அண்ணாமலை அவதூறு தகவல்களை வெளியிட்டு, தனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதல்வா் ஸ்டாலின் இரண்டு நாள்களுக்கு முன்பு அவதூறு வழக்கு தொடா்ந்துள்ளாா். இந்த வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உமாமகேஸ்வரி உத்தரவிட்டாா்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலு, அண்ணாமலை மீது  சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். 

எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி அண்ணாமலை அவதூறு தகவல்களை வெளியிட்டு, தனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாகவும், நோட்டீஸ் அனுப்பியும் அண்ணாமலை மன்னிப்பு கேட்காததால் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17 ஆவது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் மனு தாக்கல் செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT