முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சைப் பெற்று வருவோரை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 
தமிழ்நாடு

கள்ளச்சாராய பலி 12 ஆக உயர்வு!

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 

DIN

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனா். கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 11 பேர் பலியாகியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எக்கியார்குப்பத்தைப் சேர்ந்த ஆபிரஹாம் (47) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும். கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT