முகப்பு
தமிழ்நாடு

நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 மே, 2023 at 1:52 PM
கோப்புப்படம்
பகிர்:

நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் குறித்த சட்டவிதிகளை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளாராக அறிவித்த பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

Advertisement

ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.