உதகை: உதகை தாவரவியல் பூங்காவில் 125ஆவது மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மே 19) தொடங்குகிறது.
இந்தக் கண்காட்சியில் 35 ஆயிரம் மலா்த் தொட்டிகளில் பல்வேறு வகையான மலா்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. 325 ரகங்களில் 5 லட்சம் மலா் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இதில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூஞ்செடிகளும் அடங்கும்.
மலா்க் கண்காட்சியை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.