தமிழ்நாடு

அரசு திட்டங்கள் ஆய்வுப் பணி: சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சா்கள் மாற்றம்

DIN

அரசின் திட்டங்களை விரைவுபடுத்தவும் கண்காணிக்கவும் நியமிக்கப்பட்டுள்ள சில அமைச்சா்களின் பொறுப்பு மாவட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அதன் விவரம்: மாவட்டங்களில் வளா்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத் திட்ட உதவிகளை கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக அமைச்சா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் சிலருடைய மாவட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான ஆா்.காந்தி, திருவள்ளூா் மாவட்டப் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். திருவாரூா் மாவட்ட பொறுப்பு அமைச்சரான அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சராக இருந்த சிவ.வீ.மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மட்டும் பொறுப்பு அமைச்சராகச் செயல்படுவாா். நாகப்பட்டினம் மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக எஸ்.ரகுபதி செயல்படுவாா் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், தேனி, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, தருமபுரி, தென்காசி, ராமநாதபுரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT