தமிழ்நாடு

சொத்து விவரங்களை மறைத்ததாக இபிஎஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

DIN

சேலம்: கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி எடப்பாடி பழனிசாமி மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன் அறிக்கை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொத்து விபரங்களை  மறைத்து காட்டியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

 வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் புகார் மீது முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த, சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விசாரணை அறிக்கையை மே மாதம் 26 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 இந்த நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையை இன்று சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில்  தாக்கல் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT