தமிழ்நாடு

தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி

தஞ்சாவூர் சோழபுரத்தில் டிரான்ஸ்பார்மர் பழுது பார்த்துக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சோழபுரத்தில் டிரான்ஸ்பார்மர் பழுது பார்த்துக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிழந்தார். 

தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரத்தில் மின்வாரிய ஊழியராக வேலை செய்து வருபவர் மணிகண்டன். இவர் அய்யாநல்லூரில் உள்ள டிரான்ஸ்பார்மரை பழுது பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார்.

ட்ரான்ஸ்ஃபார்மர் சரியாக நிறுத்தாததால் ஒரு கம்பியில் இருந்து மட்டும் மின்சாரம் வந்து கொண்டிருந்துள்ளது. இதனை கவனிக்காத மணிகண்டன் டிரான்ஸ்பார்மரின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT