முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் பாஜகவில் இணைகிறார் திருச்சி சூர்யா!

தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த திருச்சி சூர்யாசிவா மீண்டும் பாஜகவில் இணைகிறார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
படம்: திருச்சி சிவா/டிவிட்டர்
பகிர்:

தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த திருச்சி சூர்யாசிவா மீண்டும் பாஜகவில் இணைகிறார். 

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் கே.  அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

அதில், "சூர்யாசிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யாசிவா, தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

திமுக மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவாவின் மகனான சூர்யா, கட்சி பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்  ஓபிசி பிரிவு மாநில செயலாளர் பதவியில் மீண்டும் தொடருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →