கோப்புப்படம். 
தமிழ்நாடு

சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக புளியந்தோப்பு பகுதியில் சனிக்கிழமை (நவ.4) முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

DIN

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக புளியந்தோப்பு பகுதியில் சனிக்கிழமை (நவ.4) முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

அதன்படி, அயனாவரத்தில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை - ஸ்ட்ரஹான்ஸ் சாலை சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பில் நிறுத்தப்படும். மாற்றாக, குக்ஸ் சாலை - ஸ்டீபன்சன் சாலை - அம்பேத்கர் கல்லூரி சாலை - பேரக்ஸ் கேட் சாலை - பெரம்பூர் பேரக்ஸ் சாலை (இடது) வழியாகச் செல்லலாம்.

ஸ்ட்ராஹான்ஸ் சாலையின் முழுப் பகுதியும் ஒரு வழியாகச் செயல்படும். பெரம்பூர் பேரக்ஸ் சாலை - ஸ்ட்ரஹான்ஸ் சாலை சந்திப்பில் இருந்து செல்ல அனுமதிக்கப்படும்.

ஓட்டேரி சந்திப்பில் இருந்து ஸ்ட்ரஹான்ஸ் சாலையை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதியில்லை என காவல் துறை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தர்மபுரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

விஜய் தராதரம் அவ்வளவுதான்: அமைச்சர் கே.என். நேரு பதிலடி!

MGR-உடன் விஜய் தன்னை ஒப்பிடலாமா? - Tamilisai Soundararajan

ராஜஸ்தானில் வெளுத்துவாங்கும் கனமழை: 2 பேர் பலி!

கறைபடிந்த அமைச்சர்கள் பதவியில் நீடிக்க வேண்டுமா? மௌனம் கலைத்தார் மோடி

SCROLL FOR NEXT