தமிழ்நாடு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாகச் சரிவு

DIN


பென்னாகரம்: கர்நாடக அணைகளில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைத்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடியாகச் சரிந்துள்ளது.

இரு மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை முற்றிலும் குறைந்துள்ளதாலும், கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைந்துள்ளது. 

இந்த நிலையில் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. 

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை முற்றிலும் குறைந்துள்ளது. மேலும், கா்நாடக அணைகளில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி வினாடிக்கு 4,000 கன அடியாக இருந்து நீர்வரத்து சனிக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 3,000 கன அடியாகச் சரிந்தது. 

நீா்வரத்து குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைத் திட்டுகள் வெளியே தெரிந்தும், ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐவாபாணி உள்ளிட்ட அருவிகளின் நீா்வரத்து சரிந்தும் காணப்படுகிறது. 

காவிரி ஆற்றின் நீா்வரத்து அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT