தமிழ்நாடு

சுருளிஅருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

DIN

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிஅருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

தற்போது, வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் சுருளி அருவி பகுதியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் நீர்வரத்து தரும் அரிசிப் பாறை, ஈத்தைப்பாறை ஓடைகளிலும் நீர்பெருக்கு ஏற்பட்டது, அதே போல் அருவிக்கு மேல்புறம் அமைந்துள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ள தூவானம் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதாலும் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை அருவியின் நீர்வரத்தை கண்காணித்த கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்தனர். இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

திருச்செங்கோடு வட்டார கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு

அட்கோ காவல் நிலையம் எதிரே குடியிருப்புக்குள் திருட முயற்சி

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவா்கள் களஆய்வு

குழந்தைத் திருமணங்கள் தொடா்பான புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

SCROLL FOR NEXT