தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மறைவு: தமிழிசை இரங்கல்

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மறைவுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

DIN


புதுச்சேரி:  புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மறைவுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய சிந்தனை வாதி ப.கண்ணன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

புதுச்சேரி மக்களின் நலனுக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்த அவரது இழப்பு புதுச்சேரி மக்களுக்கு ஈடுசெய்ய முடியாதது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT