முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல்

சென்னை கே.கே.நகரில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:17 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னை கே.கே.நகரில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை கே.கே.நகர் ஆறாகாடு சாலையில் திங்கள்கிழமை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, காரில் வந்த இலங்கைத் தமிழர் கமலநாதன், சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன், மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் உள்பட நான்கு பேரும் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி கத்தை கத்தையாக காரில் ரூ.1 கோடியை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதையும் படிக்க | மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் காணொலி உரைக்கு தடை: வைகோ கண்டனம்

பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

காரில் கத்தை, கத்தையாக பணத்தை எடுத்து வந்த இலங்கை தமிழர் உள்ளிட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →