முகப்பு
தமிழ்நாடு

கோவையில் ஜூனியருக்கு மொட்டை அடித்து ராகிங்: 7 மாணவர்கள் கைது

கோவையில் முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் கொடுமை செய்த 7 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:18 AM
பகிர்:

கோவை: கோவையில் முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் கொடுமை செய்த 7 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் முதுநிலை மாணவர்கள், முதலாம் ஆண்டு பயிலும் மாணவரிடம் மது அருந்த பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பணம் தர மறுத்த முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து முதுநிலை மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவரின் பெற்றோர்கள் அளித்த புகாரை அடுத்து, மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், சந்தோஷ் மற்றும் யாலிஸ் ஆகிய 7 மாணவர்களை பீளமேடு காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →