மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயத் தொழிலாளி குமார் 
தமிழ்நாடு

மன்னார்குடி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயத் தொழிலாளி பலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசலில் மின்சாரம் பாய்ந்து விவசாயத் தொழிலாளி வியாழக்கிழமை பலியானார். 

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசலில் மின்சாரம் பாய்ந்து விவசாயத் தொழிலாளி வியாழக்கிழமை பலியானார். 

மேலவாசல் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் குமார் (50) விவசாயத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். 

விவசாய தொழிலாளியான குமார், புதன்கிழமை இரவு வேலை முடித்துவிட்டு வந்தவர் அதே பகுதியை சேர்ந்த விஜயராஜ் என்பவருடைய போர் செட்டில் குளித்துவிட்டு அங்கே துணியை காயப்போட கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் தனது ஆடைகளை காய வைத்து விட்டு வீட்டுக்குச் சென்றார்.

மறுநாள் வியாழக்கிழமை காலை வேலைக்கு செல்லும் போது அந்தத் துணிகளை எடுக்க முயன்றபோது மின் மோட்டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு அந்த இரும்பு கம்பியில் பாய்ந்து கொண்டிருந்த நிலையில், துணியை எடுத்த குமார் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில் அவர்  தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து மன்னார்குடி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குமாரின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வு பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர்ஸ் இருவர் வெளிநாடுகளில் கைது!

குமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு!

மத்திய சிறைக்குள் பயங்கவரவாத கைதிகளுக்கு மொபைல், தொலைக்காட்சி?

பிக் பாஸ் - 9: இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்!

அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT