தமிழ்நாடு

மதுபோதையில் தகராறு செய்த கணவர் கொலை: மனைவி கைது

மதுபோதையில் தகராறு செய்த கணவரை டைல்ஸ் அறுக்கும் இயந்திரத்தால் தாக்கி கொலை செய்த மனைவியை திருவிடைமருதூர் காவல் நிலைய போலீசா கைது செய்தனர்.

DIN

கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் மதுபோதையில் தகராறு செய்த கணவரை டைல்ஸ் அறுக்கும் இயந்திரத்தால் தாக்கி கொலை செய்த மனைவியை திருவிடைமருதூர் காவல் நிலைய போலீசா கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே முட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (62). தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இவருக்கும் இவரது மனைவி கல்யாணிக்கும் (58) இடையே வாய் தகறாறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கல்யாணி டைல்ஸ் அறுக்கும் இயந்திரத்தால் கணவரின் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அன்பழகன் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அன்பழகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து திருவிடைமருதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து கல்யாணியை திங்கள்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT