தமிழ்நாடு

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

DIN

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். 

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 16-ஆம் தேதி நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், பலத்த மழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை மற்றும் கறம்பக்குடி ஆகிய இரு வட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர வட்டங்களிலுள்ள பள்ளிகள் வழக்கம் போல தீபாவளி விடுமுறைக்குப் பிறகு இன்று காலை திறக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT