திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா, ஏழுநாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) துவங்கியது.
தினமும் அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், மேலும் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை உற்சவர் சண்முகர் மலைக்கோயில் காவடி மண்டபத்தில் லட்சார்ச்சனையும் நடைபெறும்.
நாளை 15ம் தேதி திருவாபரணம், 16ம் தேதி வெள்ளிக் கவசம், 17ம் தேதி சந்தனக் காப்பு போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு, 18ம் தேதி மாலையில் புஷ்பாஞ்சலியும், 19ம் தேதி நண்பகலில் உற்சவர் சண்முகருக்கு திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, மு.நாகன் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.