முகப்பு
தமிழ்நாடு

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (நவ. 14) காலை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

Updated On : 14 நவம்பர், 2023 at 7:55 PM
கோப்புப் படம்
பகிர்:


சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (நவ. 14) மாலைமுதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

சென்னை சென்ட்ரல், எழும்பூர், சைதாப்பேட்டை, கிண்டு, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வளசரவாக்கம், கோயம்பேடு, நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இதேபோன்று புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், பூந்தமல்லி, கரையாஞ்சாவடி, மதுரவாயல், அய்யப்பன்தாங்கல், மாதவரம், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. 

Advertisement

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (நவ. 14) காலை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.