அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழை!
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று(செவ்வாய்க்கிழமை) உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து இன்று(புதன்கிழமை) மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
தற்போது இது விசாகபட்டினத்திற்கு கிழக்கே சுமார் 510 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடா்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இந்த நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 2 மணி நேரத்துக்கு(மாலை 4 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.