கோப்புப் படம் 
தமிழ்நாடு

சென்னையில் நாளைமுதல் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர்!

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற அபய் சிங், தன்வி கண்ணா, அனாஹத் சிங் உள்ளிட்டோரும் தொடரில் பங்கேற்கின்றனர். 

DIN

சென்னையில் நாளைமுதல் (நவ. 17) நடைபெற உள்ள ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் 417 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தத் தொடர் நவ. 23ஆம்தேதி வரை நடைபெறவுள்ளது. 

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற அபய் சிங், தன்வி கண்ணா, அனாஹத் சிங் உள்ளிட்டோரும் தொடரில் பங்கேற்கின்றனர். 

பிரதான பிரிவில் 174 ஆண்கள், 63 பெண்கள் உட்பட 11 பிரிவில் 417 பேர் பங்கேற்பதாக ஸ்குவாஷ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்தப் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கு சேர்த்து ரூ.8.8 லட்சம் பரிசுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் பிரிவில் நட்சத்திர வீரர்களான அபய் சிங், ரமித் டாடன், வேலவன் செந்தில்குமார், சுராஜ் சந்த் பங்கேற்கின்றனர். 

இதேபோன்று பெண்கள் பிரிவில் நட்சத்திர வீராங்கனைகளான தன்வி கண்ணா, அனாஹத் சிங், ஊர்வசி ஜோஷி, ஜேனட் வைதி உள்ளிட்டோரும் தொடரில் பங்கேற்கின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT