தமிழ்நாடு

ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் வெங்கிடரமணன் காலமானார்

DIN

உடல்நலக்குறைவு காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கிடரமணன் சென்னையில் இன்று காலமானார். 

அவருக்கு வயது 92 ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் 18வது ஆளுநராக பதவி வகித்தவர் எஸ் வெங்கிடரமணன். இவர் 1990 ஆம் ஆண்டில் இருந்து 1992 ஆம் ஆண்டு வரை ஆளுநராக இருந்தார். 

மேலும் 1985 ஆம் ஆண்டு முதல் 1989 வரை மத்திய நிதித்துறை செயலாளராகவும், கர்நாடக அரசின் ஆலோசகராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மறைந்த வெங்கிடரமணனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 

அதில் ஒருவர் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT