தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.

DIN

விழுப்புரம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.

செஞ்சி வட்டம், நாட்டார்மங்கலம் பேருந்து நிலையம் அருகே 2023, மார்ச் 7-ஆம் தேதியும், வானூர் வட்டம் ஆரோவில் பேருந்து நிலையம் அருகில் மார்ச் 10-ஆம் தேதியும் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினார்.

அப்போது, அவர் தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் டி.எஸ்.சுப்பிரமணியன் தனித்தனியாக வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கில்,  நவம்பர் 6-ஆம் தேதி தேதி  விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆஜரானார். இதையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இன்று இந்த இரு வழக்குகளிலும் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆஜரானார்.

இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை டிசம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) வெங்கடேசன்  உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT