அண்ணா அறிவாலயம் 
தமிழ்நாடு

திமுகவில் இருந்து 3 கவுன்சிலர்கள் இடைநீக்கம்!

திருநெல்வேலி மாநகராட்சியின் 3 வார்டு உறுப்பினர்களை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

DIN

திருநெல்வேலி மாநகராட்சியின் 3 வார்டு உறுப்பினர்களை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்தியில்,

“திருநெல்வேலி மாநகராட்சி 6வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24வது வார்டு உறுப்பினர் ரவீந்தர் மற்றும் 7வது வார்டு பிரதிநிதி ஆர்.மணி ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நான்கு பேரும் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக முறைகேடு புகார் தெரிவித்து சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT