அடித்துக் கொலை செய்யப்பட்ட மூதாட்டி ராமுத்தாய் 
தமிழ்நாடு

கம்பத்தில் மூதாட்டி அடித்துக் கொலை

தேனி மாவட்டம், கம்பத்தில் 88 வயது மூதாட்டியை வீடுபுகுந்து அடித்துக் கொலை செய்துவிட்டு தங்க நகையை திருடிச் சென்றவர்களை தெற்கு போலீசார் தேடி வருகின்றனர்.

DIN


கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் 88 வயது மூதாட்டியை வீடுபுகுந்து அடித்துக் கொலை செய்துவிட்டு தங்க நகையை திருடிச் சென்றவர்களை தெற்கு போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம், கம்பம் சுருளிப்பட்டி சாலையில் வசித்து வந்தவர் மணிமுத்து மனைவி ராமுத்தாய் (88) . இவர் மகன்வழி பேரன் போத்திராஜா பராமரிப்பில் இருந்தார். வெள்ளிக்கிழமை பாட்டியின் வீட்டில் மின் இணைப்பு பழுது ஏற்பட்டதால் போத்திராஜா சரி செய்துவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் மணிகண்டன் என்பவர் போத்திராஜாவிடம் பாட்டி வீட்டில் மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போத்திராஜா வீட்டிற்கு சென்று பார்த்த போது பாட்டி ரத்தகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, ராமுத்தாய் அணிந்திருந்த தங்க நகையையும் காணாமல் போயிருந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு காவல் நிலைய போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மூதாட்டியை அடித்துக் கொலை நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT