கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை ஐஐடி பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம்!

சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை தொடர்பான புகாரையடுத்து, பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

DIN

சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை தொடர்பான புகாரையடுத்து, பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்கள் தற்கொலை குறித்து ஆய்வு செய்ய அமைத்த குழு அளித்த பரிந்துரையின் பேரில் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் பேராசிரியர், மாணவரை உள்ளடக்கி 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் மார்ச் 31ல் ஆராய்ச்சி மாணவர் சச்சின் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பேராசிரியர் ஆசிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் மாணவர்களின் பாதுகாப்பு, வளாகத்தில் நெறிசார்ந்த நடைமுறைகளை கண்காணிப்பது, மாணவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பது, கற்றலுக்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவது போன்றவை தொடர்பான பொறுப்புகளை கையாள  ஐபிஎஸ் அதிகாரி ஜி.திலகவதி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

SCROLL FOR NEXT