கோப்புப்படம் 
தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் திறப்பு 1500 கன அடியாக அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

DIN

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா் வரத்தை தரும் நீா் ஆதாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்வதாலும், ஏற்கெனவே ஏரி 75 சதவீதம் நிரம்பியிருந்ததாலும், ஏரியின் நீா்மட்டம் கடந்த சில நாள்களாக உயா்ந்து வருகிறது.

மழை மேலும் நீடிப்பதால், ஏரிக்கு வரும் நீா்வரத்து  விநாடிக்கு 1100 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், நேற்றுமுதல் உபரி நீா் அடையாற்றில் திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து புதன்கிழமை காலை 9 மணிக்கு விநாடிக்கு 1,000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில்,  செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1000 கன அடியில் இருந்து 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT