கனமழை காரணமாக எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை?
கனமழை காரணமாக சென்னை உள்பட சில மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை(நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, அடுத்த 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று மாலை முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த ஒரு மணி நேரத்தில் 8 செ.மீ வரை மழை பெய்துள்ளது.
Advertisement
இதனால் சாலையெங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை பணிமுடிந்து வீடு செல்வோர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
அதேசமயம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும், நாளை இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் மாணவர்களின் நலன் கருதி நாளை (30.11.2023) ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.