தமிழ்நாடு

தஞ்சைப் பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

DIN

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, தமிழ்கம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர். 

இந்த நிலையில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அணியும் ஆடை ஒருசிலருக்கு முகம் சுழிக்க வைக்கிறது. இதைத் தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

கோயில் நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாக்கும் இடம் என இரண்டு இடங்களில் நேற்று முதல் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண்கள் வேட்டி, சட்டை பேண்ட் அணிந்து வரலாம் என்றும், பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வர வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையைப் பார்த்த பலரும் இதை வரவேற்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT