மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் எதையும் பயன்படுத்தமாட்டோம் என்று ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
அதிமுக பெயா், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி கடந்த நவம்பர் 8 ஆம் தேதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு அந்த வழக்கு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஓபிஎஸ்ஸுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க | சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு
அப்போது ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதுவரை இபிஎஸ் தொடர்ந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு இபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
பின்னர், மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் எதையும் பயன்படுத்தமாட்டோம் என்று ஓபிஎஸ் தரப்பு உத்தரவாதம் அளித்ததையடுத்து, வழக்கினை டிச. 11 ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மேலும் ஓபிஎஸ் தரப்பு அதிமுகவின் கொடி, சின்னம் என எதையேனும் பயன்படுத்தினால் தங்கள் கவனத்திற்கு கொண்டுவரும்படி இபிஎஸ் தரப்பினரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.