தமிழ்நாடு

பராமரிப்புப் பணி: புறநகர் மின்சார ரயில்கள் நாளை ரத்து

சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையங்களில் 4 மணிநேர பராமரிப்பு பராமரிப்புப் பணிக்காக, திங்கள்கிழமை(அக்.2) புறநகர் ரயில் சேவைகளிள் மாற்றம் செய்யப்பட்டுள்

DIN


சென்னை: சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையங்களில் 4 மணிநேர பராமரிப்புப் பணிக்காக, திங்கள்கிழமை(அக்.2) புறநகர் ரயில் சேவைகளிள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திங்கள்கிழமை(அக்.2) விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம், சூலூர்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும்.

காஞ்சிபுரம்-கடற்கரை, கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் நாளை திங்கள்கிழமை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே புறப்படும் ரயில்கள் காலை 10.55 முதல் மதியம் 1 மணி வரை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை எப்போது செயல்பாட்டுக்கு வரும்?: கனிமொழி கருணாநிதி கேள்வி

ஆத்தூா், தம்மம்பட்டி முருகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியின் 109-ஆவது ஆண்டு விழா

மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

திமுகவுடன் இரண்டு நாள்களில் தொகுதிப் பங்கீடு பேச்சு: காங்கிரஸ்

SCROLL FOR NEXT