எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

காவிரி நீர்: அக். 6-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

குறுவை சாகுபடிக்கு உரிய நீரைப் பெற்றுத்தராத தமிழக அரசையும், நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் கண்டித்து அக்டோபர் 6ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

குறுவை சாகுபடிக்கு உரிய நீரைப் பெற்றுத்தராத தமிழக அரசையும், நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் கண்டித்து அக்டோபர் 6ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரைப் பெற முயற்சி மேற்கொள்ளாமலும்; குறுவை சாகுபடியினை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காமலும் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த விடியா திமுக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும்; குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றிற்கு 35,000/- ரூபாயை நிவாரணத் தொகையாக உடனடியாக வழங்க வலியுறுத்தியும் அக்டோபர் 6ஆம் தேதி முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

இதில், கட்சி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், விவசாயப் பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மசோதா நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரர் மீது நடவடிக்கை!

SCROLL FOR NEXT