முகப்பு
தமிழ்நாடு

திருப்பதியில் அக்.15 முதல் நவராத்திரி பிரம்மோற்சவம்!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் வருகிற 15-ம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:17 PM
திருப்பதி (கோப்புப் படம்)
பகிர்:

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் வருகிற 15-ம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. 

திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் 9 நாள்கள் நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழா அக்.15-ம் முதல் 23-ம் தேதி வரை நிகழ உள்ளது. 

முன்னதாக, கடந்த செப்டம்பர் 18 முதல் 26 வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 

புரட்டாசி மாதம் நடைபெற்று வருவதால் ஏற்கனவே திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துவரும் நிலையில், 3வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அக்.6, 7, 8, 13, 14, 15 ஆகிய தேதிகளில் சர்வ தரிசன டோக்கன்கள் நிறுத்திவைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

நவராத்திரி பிரம்மோற்சவத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தேவஸ்தானம் செய்து வருகின்றது.

முழு கட்டுரையைப் படிக்க →