தமிழ்நாடு

ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்! மோடியால் தமிழ்நாட்டை மறக்க முடியாது!!

DIN

தமிழ்நாட்டில் உள்ள ஹிந்து கோயில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுவது கண்டிக்கத்தக்கது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஹிந்து கோயில்களை மாநில அரசுகள் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், தமிழ்நாடு அரசு ஹிந்து கோயில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் உரையாற்றினார். 

வள்ளலாரின் 200 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 

வள்ளலாரின் இறை அனுபவங்கள் என்ற நூலினை வெளியிட்டு, வடலூரில் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் பெயரில் அமையவிருக்கும் வள்ளலார் சர்வதேச மையத்திற்கான ஆணையினை வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக் குழு தலைவரிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான மிக முக்கியமான வழிகாட்டி அருள்திரு வள்ளலார். இறையியல் என்பது அவரவர் விருப்பம், அவரவர் தனிப்பட்ட உரிமை. ஆனால் அதை ஒரு கூட்டம் அரசியலுக்கு பயன்படுத்தி அதன்மூலம் குளர்காய்கிறது. 

கடந்த 2 ஆண்டுகளில் 1,000 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம். வரலாற்று சிறப்புமிக்க 112 கோயில்களை சீர்செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். 2 ஆண்டுகளில் ரூ.3.50 கோடி மதிப்பிலான கோயில்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஒரு மாநில அரசின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்தில் பேசுவது முறையா? பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் தவறான, அவதூறு செய்தியை சொல்வது முறையா? எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், 

எங்கு சென்றாலும் தமிழ்நாட்டை பற்றித்தான் பிரதமர் மோடி பேசுகிறார்.  பிரதமரால் தமிழ்நாட்டை மறக்கவே முடியவில்லை எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT