தமிழ்நாடு

காவிரி விவகாரம்: பேரவையில் தனித் தீர்மானம் 

DIN


சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது என்று கூறினார்.

சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானத்தை முன் மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்துக்கு இதுவரை 9.19  டிஎம்சி தண்ணீர் வர வேண்டிய நிலையில் இதுவரை 2.18 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது.

தமிழகத்துக்கு கர்நாடக அரசு முறையாக தண்ணீர் திறக்கவில்லை. காவிரி ஆற்றில் செயற்கையான நெருக்கடியை கர்நாடகம் உருவாக்கி வருகிறது என்றும் காவிரியில் தண்ணீர் திறக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டும் ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்துக்காக போராடி வருகிறோம். சம்பா பயிர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்ட ஜூலை 17ஆம் தேதி முதல் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் செயற்கையான நெருக்கடிய கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாத வாரியாக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT