கோப்புப்படம் 
தமிழ்நாடு

அக்.25ல் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவையொட்டி,  தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவையொட்டி,  தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று(அக்.11)   நடைபெற்றது.

 நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா அக்டோபர் 24 -ஆம் தேதி தொடங்குகிறது. சதய நட்சத்திர நாளான 25 -ஆம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தபடி, இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவையொட்டி, வரும் அக்.25 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT