தமிழ்நாடு

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

DIN

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று(சனிக்கிழமை) நடைபெறவுள்ள திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்றிரவு சென்னை வந்தனர். 

இந்நிலையில் சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

பிரியங்கா காந்தி, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். 

தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT