தமிழ்நாடு

நடிகர் விஜய்யைக் கண்டு அஞ்சுகிறது திமுக: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

DIN

நடிகர் விஜய்யைக் கண்டு திமுக அஞ்சுகிறது என்று முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர்கள் இடையே அரசு பாரபட்சம் பார்க்கக் கூடாது. கடந்த அதிமுக ஆட்சியில் பாரபட்சமில்லை. சிறப்புக் காட்சிக்கு அனுமதி தந்த பின் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது சரியல்ல. திரைத்துறை தற்போது முடங்கியுள்ளதாக திரைத்துறையினர் கூறுகின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் லியோ. இந்த படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து உள்ளார். ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ பட சிறப்புக் காட்சிகள் தொடர்பாக புதிய அரசாணை ஒன்றை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டது. 

அதில் லியோ பட சிறப்புக் காட்சி காலை 9 மணிமுதல்தான் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதிக் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதிகாலைமுதலே லியோ சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், தமிழக அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT