தம்மம்பட்டி அருகே மின்கம்பி மிதித்து தொழிலாளி பலி
தம்மம்பட்டி அருகே மின்கம்பி மிதித்து தொழிலாளி ஒருவர் பலியானார்.
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே மின்கம்பி மிதித்து தொழிலாளி ஒருவர் பலியானார்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் புதிதாக கட்டப்படும் கோயில் அருகே மின்கம்பியை மிதித்த தொழிலாளி ஒருவர் பலியானார்.
ஆத்தூர் அருகே கோபாலபுரம், சத்யா நகரில் வசிப்பவர் வரதராஜ் (55), கொத்தனார். இவர், செந்தாரப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுவரும் மாரியம்மன் கோயிலில் வேலை செய்து வந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: தெலங்கானாவில் ராகுல், பிரியங்கா!
இந்த நிலையில், அருகில் கிடந்த மின்கம்பியை வரதராஜ் மிதித்ததால் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக தம்மம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.