பங்காரு அடிகளார் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

DIN

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

ஆன்மிகத்தில் பங்காரு அடிகளாரின் சேவையைப் போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  திபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டிற்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு
வழங்கி வந்தார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார். 

கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய
வேண்டும் என்பதற்காக தி.மு.க பல ஆண்டுகளாகப் போராடி, அதனை
நடைமுறைப் படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளார் ஆன்மிகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத் தக்கது.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார், தற்போது
மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். 

பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு
மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

பென்னாகரத்தில் மழை

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை: ரூ.1.30 கோடிக்கு விற்பனை இலக்கு

ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக பெற்ற பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT