பங்காரு அடிகளார் 
தமிழ்நாடு

பங்காரு அடிகளார் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று (அக்.19) மாலை காலமானார். அவருக்கு வயது 82.

DIN


ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆன்மிக குருக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று (அக்.19) மாலை காலமானார். அவருக்கு வயது 82.

அவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மு.க. ஸ்டாலின்

ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டிற்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு
வழங்கி வந்தார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார். 

பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஜி.கே. வாசன்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். பங்காரு அடிகளார் மறைவு ஆள்மிகத்துக்கு பெரும் இழப்பு எனக் குறிப்பிட்டார்.

உதயநிதி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார், கலைஞர் அவர்கள் மீதும் - மு.க. ஸ்டாலின் மீதும் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். 

அடிகளாரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அவரை பின்பற்றும் லட்சோப லட்ச பொதுமக்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி அஞ்சலி!

அமெரிக்க காவல்துறையால் இந்திய மாணவர் என்கவுன்டர்! நடந்தது என்ன?

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’: முதல்வரின் ‘எக்ஸ்’தள முகப்பில் புதிய வாசகம்

தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும்: கே.அண்ணாமலை

பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சனம்!

SCROLL FOR NEXT