முகப்பு
தமிழ்நாடு

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:12 AM
பகிர்:

சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழையும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 

இந்த மாவட்டங்களில் இன்று(சனிக்கிழமை) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 3 மணி நேரத்திற்கு  பல்லாவரம், ஆலந்தூர், குன்றத்தூர், மதுரவாயல், சோழிங்கநல்லூர், தாம்பரம் பகுதிகளிலும்

அமைந்தக்கரை, அயனாவரம், எழும்பூர், மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், மாதவரம் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து திங்கள்கிழமை (அக். 23) தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைக்குள் (அக். 22) வடகிழக்குப் பருவமழை தொடங்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →