முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:12 AM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு, கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும், கடல் காற்றும் பலமாக வீசி வருகிறது. 

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →