சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆவடி வழித்தடத்தில் செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவள்ளூர் வழித்தடத்தில் உள்ள அண்ணனூர் பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்ட ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றதால் இன்று காலை ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.
சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆவடி வழித்தடத்தில் இயங்கும் அனைத்து ரயில்களும் மறு உத்தரவு வரும்வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளனதால், வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட விரைவு ரயில்கள் சென்னையிலிருந்து புறப்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், சதாப்தி, பிருந்தாவன், இரண்டடுக்கு விரைவு ரயில் உள்ளிட்டவற்றின் புறப்பாட்டு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதனால், திருவள்ளூர் வழித்தடத்தில் செல்லும் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.